எது இரகசியம் ? பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். பேசாமலேயே இருந்தால் ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆக மௌனம் இரகசியத்தை நன்கு காக்கிறது என்பது புலனாகிறது. மௌனம் எத்தன்மையுடையது ? சப்தம் செய்யாமல் இருப்பது மௌனம். பூரண அமைதியே அதன் தன்மை. எது அசைகிறதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுவதும் அசைகிறது. எனவே பிரகிருதியினிடத்தில் அமைதியில்லை. அதனால் அதனிடம் மௌனமில்லை. ஆனால் மனம் அடங்க அடங்க அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனம் அடங்கி, ஒடுங்கினால் என்ன நடக்கும் ? ஆன்ம சொரூபம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த ஆன்மா அசையாதது. அதில் சப்தமில்லை. எனவே ஆன்மா மௌன சொரூபமாகும். மேலும் இந்த ஆன்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கிவிட முடியாது. எது விளக்கத்துக்கு வரவில்லையோ அது இரகசியமாகும். ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆன்மாவாகும்.  செய்வினையால் பலர் பாதிப்படைந்திருக்கிறார்கள். இதற்கு தீர்வுதான் என்ன? மகான்கள் செய்வினையால் பாதிப்பு பெற்றாலும் பெரிய பாதகத்தை அடையவில்லை. ஆனால் சாதாரண மனிதரான சாணக்கியனால் ஏவப்பட்டு துஷ்ட சக்தியின் தாக்குதலை தாங்க முடியாமல் அரசர் தனநன்தன் பெரிய பாதகத்தையே அடைந்தார். செய்வினையால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு பரிகாரம் உக்கிரமான தெய்வங்களை வணங்கினால் பில்லி சூனியத்தால் வரும் பெரிய பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். இவர்களை வணங்கு முன் விநாயகர் வழிபாடும் உங்கள் குல தெய்வத்தையும் வணங்கினால்தான் எடுக்கும் முதல் முயற்ச்சி கை கொடுக்கும். இல்லை என்றால் ஆரம்பிக்கும் முன்பே பல தடங்கல் ஏற்படும்.
செய்வினை பாதிப்பில் இருந்து வெளிவரவே முடியாது.  பில்லி சூனியம் உண்மையா என்ற சந்தேகம் பலர் மனதில் காலம் காலமாக இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த வினைதான் இந்த ஜென்மத்தில் செய்வினையாக வருகிறது என்றும் அதைதான் நாம் யாரோ நமக்கு செய்த செய்வினை என்கிறோம், அது மூடநம்பிக்கை என்பதும் சிலர் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நம் முன் முற்பிறவி கர்மவினையும் இந்த பிறவியில் நம் எதிரிகளால் செய்யப்படும் துஷ்ட பூஜைகளும் இணைந்தால் அதுவே செய்வினையாகும். செய்வினையால் பாதிப்பு அடைந்தவரின் உண்மை சம்பவம் இது. தனநன்தன் என்ற பேரரசனுடைய சேனாதிபதி ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டு இருந்தார். வந்தவர் பாதை மறந்தார். யாரிடம் இந்த காட்டில் வழி கேட்பது? என்ற சிந்தனையில் இருந்தபோது அவர் எதிரில் விஷ்ணுகுப்தன் என்ற அந்தணர் வந்துக் கொண்டு இருந்தார். அவரிடம், அரண்மனைக்கு செல்லும் வழியை கேட்டார் சேனாதிபதி. நானும் அந்த ஊருக்குத்தான் செல்கிறேன். வாருங்கள் என்னுடன்.என்று அழைத்து கொண்டு சாஸ்திரங்களை பற்றியும், சமுதாய விழிப்புணர்ச்சி போன்ற பல தகவல்களை சுவாரசியமாக பேசிக் கொண்டே ஊருக்கு வந்தடைந்தார்கள் இருவரும். அந்தணரே உன் முக தோற்றமும் தேக தோற்றமும் அழகுடன் இல்லை என்றாலும், பல விஷயங்களையும் சாஸ்திரங்களையும் நன்றாக தெரிந்த அந்தணராக இருக்கிறாய். பலே நீ புத்திசாலிதான்.என்று சேனாதிபதி மனமாற விஷ்ணுகுப்தரை பாராட்டினார். அத்துடன், “நாளை அரண்மனைக்கு வா. அரசு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அரசரும் கலந்து கொள்ள இருக்கிறார். உன்னை அரசரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்.என்று கூறினார் சேனாதிபதி. மறுநாள் அரண்மனை விருந்து நிகழ்சிக்கு வந்தார் விஷ்ணுகுப்தர். விருந்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் பலர். அப்போது அரசர் அமரும் இடம் என்று தெரியாத விஷ்ணுகுப்தர், அந்த இடத்தில் அமர்ந்து உணவில் கைவைக்கும் போது, திடீரென அந்த நேரத்தில் அரசர் கோபமாக குப்தனை பார்த்து, “டேய்எழுந்திரு. யார் உன்னை அழைத்தது.என்று கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதை கேட்டு ஓடி வந்த சேனாதிபதி, “மன்னிக்க வேண்டும் மன்னாநானே இந்த அந்தணரை விருந்துக்கு அழைத்தேன். இவர் பல சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.என்று எவ்வளவோ விஷ்ணுகுப்தரை பற்றிய பெருமைகளை எடுத்து சொல்லியும், அரசர் தனநன்தன் கேட்பதாக இல்லை. இதனால் அந்தணர் விஷ்ணுகுப்தர் கடும் ஆத்திரம் அடைந்தார். பலர் முன்னிலையில் அரசன் என்கிற அகம்பாவத்தில் நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய். உன்னை இதே அரசப்பதவியில் இருந்து வீழ்த்தி காட்டுகிறேன். இது சபதம்.என்று கூறிவிட்டு வெளியேரினார் விஷ்ணுகுப்தர். சாதாரண அந்தணனாக இருக்கும் எவனோ இவன், அரசனாகிய என்னை வீழ்த்த போகிறானாம். பைத்தியகாரன்.என்று சிரித்து கொண்டே சென்றார் அரசர் தனநன்தன். பிறகு அந்தணர் விஷ்ணுகுப்தரையும் நடந்த சம்பவங்களையும் அரசின் பல அலுவலுக்கிடையே மறந்தே போனார் அரசர். ஆனால் விஷ்ணுகுப்தர் அந்த அவமானங்களை மறக்கவில்லை. அரசனை என்ன செய்யலாம்? படைபலத்துடன் சென்று அரசனை வீழ்த்துவது நடக்காத காரியம். நேருக்கு நேர் மோதுவதும் வம்பில் முடியும். மற்ற எதிரி நாடுகளை தூண்டிவிட்டாலோ அரசன் தனநன்தன் சாமர்த்தியன் தந்திரி தப்பிவிடுவான். ஆனால் அவன் தப்ப முடியாத ஓரே ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை வீசினால் அவன் என்ன அரசன்? எவனாக இருந்தாலும் அவர்களுக்கு அது எமன். ஆம்செய்வினைதான் ஒரேவழி.என்ற முடிவுக்கு வந்தார் அந்தணர் விஷ்ணுகுப்தர்.
துஷ்ட மந்திரங்களை உச்சரித்து அரசருக்கு செய்வினை செய்தார் விஷ்ணுகுப்தர். இதனால் அரசருக்கு திடீரென உடல்நலம் பாதிப்படைந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து அரசருக்கு சிகிச்சை செய்தும் அரசர் தனநன்தன் உடல்நலம் தேரவில்லை. மேலும் மேலும் உடல்நிலை மோசமாக போய்க் கொண்டே இருந்தது. கடைசியில் மருத்துவர்களால் அரசர் கைவிடப்பட்டார். நாட்டை சரியாக யாருக்கும் பாதுகாக்க தெரியாததால், விஷ்ணுகுப்தன், அறிவு தந்திரத்தாலும் மாந்தீரிக சக்தியாலும் நாட்டை தன் வசப்படுத்தினார். தன் நண்பனான சந்திரகுப்தனை அந்நாட்டிற்கு அரசனாக்கினார் விஷ்ணுகுப்தன். சந்திரகுப்தன் அரசனாக இருந்தாலும் முழுகட்டுபாடு விஷ்ணுகுப்தனிடம்தான் இருந்தது நாடு. இருந்தாலும் அரசை நல்வழி நடத்தி, நாட்டை சிறப்பாக வைத்திருந்தார் விஷ்ணுகுப்தன். விஷ்ணுகுப்தரின் மாந்தீரிகத்தால்தான் அரசர் தனநன்தன் பதவியை இழந்து உடல்நலம் பாதிப்படைந்தார் என்பதை மக்கள் பிறகு அறிந்தார்கள். ஆனாலும் தனநன்தனைவிட சந்திரகுப்தனின் ஆட்சி நன்றாக இருந்ததால் மக்கள் தனநன்தனை மறந்தார்கள். மகரிஷி சணகரின் மகன்தான் இந்த விஷ்ணுகுப்தர். விஷ்ணுகுப்தரைதான் வரலாறு சாணக்கியர் என்று அழைக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படி எதிரிகளை அடக்க வேண்டும் என்று ராஜதந்திரத்தை பல பகுதிகளாக எழுதியிருக்கிறார் அவர். அதில் பதினான்காம் பாகத்தில் எதிரிகளையும் துரோகிகளையும் தீர்த்துகட்டுவதற்கு ரகசிய வழிகளையும் அத்துடன் குறிப்பாக மாந்தீரிக முறைகளையும் சொல்லி இருக்கிறார் சாணக்கியர். பலம் கொண்ட எதிரியை அழிக்க மாந்தீரிகமும் செய்வினையும் கூட தவறில்லை, அதுவும் ஓர் அரசியல் தந்திரம் என்கிறார் சாணக்கியர்.
  • இப்படி அரசர்கள் மட்டும் செய்வினையால் பாதிப்பு அடையவில்லை, மகான்களும் மாந்தீரிக செய்வினையால் துன்பப்பட்டு இருக்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரருக்கு மக்கள் மத்தியில் பெரும் புகழ் பரவி வருவதை பொறுக்க இயலாத அபிநயகுப்தர் எனும் மந்திரவாதி, ஸ்ரீஆதிசங்கரருக்கே செய்வினை செய்ததால், ஸ்ரீஆதிசங்கரர் உடல்நலம் பாதிப்படைந்தார். காக்கும் கடவுளான அன்னை பராசக்தியும் செய்வினையால் பாதிப்படைந்திருக்கிறார். மகிஷாசுரனிடம் போரிட்டாள் சக்திதேவி. கடுமையான யுத்தமாக இருந்தது. அசுரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் மாந்தீரிகத்தில் வல்லவனான விசுக்ரனை அனுப்பி பராசக்திக்கு செய்வினை செய்ய சொன்னான் பண்டாசுரன். விசுக்ரன், போர்களத்திற்கு சென்று விக்னயந்திரத்தை தகடில் வரைந்து துஷ்டசக்தியின் மந்திரத்தை உச்சரித்து அன்னை பராசக்தியின் அரண்மனையில் மறைத்து வைத்தான். இதனால் சக்திதேவியின் படையினர், வலு இழந்து விழுந்தால் எழுந்திருக்க முடியாதபடி அளவு பலவீனம் அடைந்தார்கள். அன்னை பராசக்திக்கு உதவிய பல ஜீவராசிகள் உயிர் இழந்தன. எதனால் இப்படி ஒர் விபரீதம் நடக்கிறது? என்பதை அம்பிகை தன் தவஞானத்தால் பண்டாசுரன், விக்னயந்திரத்தில் செய்வினை செய்திருப்பதை அறிந்தாள். செய்வினை தகடை தேட சொன்னாள். பலர் தேடியும் அந்த யந்திரம் கிடைக்கவில்லை. கடைசியாக விநாயகப் பெருமானிடம் அந்த யந்திரத்தை தேடி எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள் அம்பிகை. யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாய விக்னயந்திரத்தை விநாயகர் சர்வசாதாரணமாக கண்டுபிடித்து அந்த யந்திரத்தை பொடி பொடியாக உடைத்து, கடலில் வீசி எறிந்தார். இதனால் விக்னயந்திரத்தை செயல் இழக்கச் செய்த விநாயகருக்கு விக்னேஸ்வரர் என்று பெயர் வந்தது. பிறகு சக்திதேவியும் அசுரர்களை அழித்து வெற்றி பெற்றார். 

1 கருத்து: