மஹா வசிய சாம்பிராணியானது குருவின் வழிகாட்டுதலோடு 100 வருட வேப்பமரத்தின் வடக்கு வேர், மஹா வில்வம், வேப்ப செடி, செந்நாயுருவி, செடி, மாமர செடி, வில்வ, வேப்ப, மாமர, அரசமர புல்லுருவி, சந்தன மர பட்டை, அருகம்புல், மஞ்சள் செடி, சிறு முல்லை, பெருநெல்லி, மல்லிகை செடி, ஏரழிஞ்சில் விதை, மருள்ஊமத்தை செடி, விஷ்ணு கிரந்தி, நீல, சிகப்பு, மஞ்சள், கருப்பு குண்டுமணி செடி, தொட்டால் சிணுங்கி, மஞ்சள் கரிசாலை, சிறியா நங்கை, இவற்றை முறையாக சாப நிவர்த்தி செய்து முறையாக காப்பு கட்டி எடுத்து யானை சாணம், பசு சாணம், மற்றும் அகில், தேவதாரு, என வசிய, ஆகர்ஷனம் வகையான சாமான்களை சேர்த்து செய்யப்பட்டது.

இந்த மஹா வசிய சாம்பிராணியை தெய்வ உபாசனை செய்பவர்கள், மந்திரங்கள் ஜெபிப்பவர்கள், ஜெபிக்கும் இடத்தில் தூபம் போட சகல தெய்வங்களும், தேவதைகளும், யட்சினிகளும், வசியம், ஆகர்ஷனம் ஆகும். இச்சாம்பிராணி புகைப்பட்ட இடமெல்லாம் தரித்திரம் விலகி நவக்கிரக தோஷங்கள் நீங்கி சகல செல்வமும் உண்டாகும், தெய்வ சக்திகள் அதிகரிக்கும் . பில்லி, சூனியம், ஏவல், செய்வினை ஒழியும். பேய், பிசாசு, துஷ்ட சக்திகள் உடனடியாக ஓடும். வியாபாரம், தொழில் அபிவிருத்தி உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.

குல தெய்வ அருள் நிரந்தரமாக இருக்கும். கணவன், மனைவி வசியம் உண்டாகும். கோர்ட், கேஸ் வழக்குகள் சாதகமாகும். வீடு, நிலம், வாகன வசதி உண்டாகும். வாழ்நாள் முழுதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

சகல தெய்வ தேவதைகளும் இம்மூலிகை சாம்பிராணி போட்ட இடத்திற்கே தேடி வரும். இந்த புகை வாசனையை முகர்ந்து கொண்டு மந்திரம் ஜெபித்தால் சகல விதமான மந்திரமும் சித்தியாகும். எதிரிகள் ஒழிவார்கள். எந்த காரியத்திலும் வெற்றி உண்டாகும்.

தெய்வங்களுடைய மஹா யந்திரங்கள் வைத்து பூஜை செய்து வந்தால் உடனே பலன் தெரியும்.

விநாயகர், பைரவர், துர்க்கை, வாராஹி, காளி தெய்வங்களை உபாசனை செய்பவர்கள், பூஜை செய்பவர்கள், குல தெய்வமாக உள்ளவர்கள் அதற்கு ஏற்றவாறு உள்ள வசிய சாம்பிராணி, வசிய எண்ணை பயன்படுத்தினால் தெய்வம் வசியம் ஆகி பல வெற்றிகள் கொடுக்கும்.                                                                      மூலிகை சாப விமோசன மந்திரம்:-
"
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம்,
ஸர்வ மூலி சாபம் நாசய நாசய,
சித்தர் சாபம் நாசய நாசய,தேவ முனி , 
அசுர முனி சாபம் நாசய நாசய,
ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய
ஹூம்பட் ஸ்வாஹா"என்பதாகும்.                                                                                  குருவின் மூலம் மந்திர உபதேசம்
ஏதாவது இஷ்டதெயவ உபாஸன முறையை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் ஒரு குருவின் மூலம் மந்திர உபதேசம் பெற்று அவர் அறிவுரைப்படி பூஜைகளை மேற்கொள்வது நன்று..
காளி உபாசனை செய்பவர்கள் இஷ்ட தெய்வமான காளிகைக்கு தினமும் அஷ்டோத்ர அர்ச்சனை, காயத்த்ரி, மூலமந்திர ஜபம், ஆகியவற்றை செய்தல் நன்று. மாதத்தின் முக்கியமான நாட்களில், அதாவது அஷ்டமி, நவமி, அம்மாவாசை, பௌர்ணமி, ஆகிய தினங்களில் மற்ற பண்டிகை நாட்களில் மற்ற ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் கிடைக்கும் அவகாஸத்திற்கு ஏற்றாற்போல் பாராயணம் செய்யலாம். காளியின் ஸஹஸ்ரநாம பாராயணம் மேற்கொள்வது மிகவும் சிறந்தது. அதனால் கிடைக்கும் பலன்கள் அளவிடமுடியாதது.
பூஜை செய்யும் வேளையில் மனமொன்றி தெய்வத்தை பிரார்த்தனை மற்றும் பூஜை செய்ய வேண்டும். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட வேளையை பூஜை மற்றும் ஜபம் செய்வதற்கு ஒதுக்குவது நன்று. ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருந்தாலும் சிலநாட்களில் பழகிவிடும்.

காளி உபாசனை மேற்கொள்கிறவர்கள் மேற்கூறியவற்றை கடைபிடித்து. தினந்தோறும் தவராமல் காளி காயத்த்ரி, மூலமந்திர ஜபத்தினை முறைப்படி செய்தல் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக